Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

உத்தமபாளையம் திரிக்குணகிரி மலையின் சிறப்பை வியந்த பள்ளி மாணவர்கள் :

உலக பாரம்பரிய வாரத்தையொட்டி உத்தம பாளையம் திரிக்குணகிரி மலையை மாணவர்கள் பார்வையிட்டனர்.

ஆண்டிபட்டி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். வரலாற்று ஆய்வு மையச் செயலாளர் பஞ்சுராஜா முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் பள்ளி, கம்பம் நாலந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திரிக்குணகிரி மலையில் கிபி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வட்டெழுத்துகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x