Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21-ம் தேதி கோவை வருகிறார். 22-ம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தவிர, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் முதல்வர் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு கூறும்போது, “முதல்வரை தொழில் துறை நிர்வாகிகள் கூட்டாக நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோருவது, தொழில் கடன்கள் பெறும்போது செலுத்த வேண்டிய கட்டணத் தொகைகளில் இருந்து விலக்கு அளித்தல், பாதுகாப்புத் துறை உற்பத்திக்கென தமிழ கத்தில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT