Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

முன்பதிவு இல்லாத ரயில்கள் 11 வழித்தடங்களில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேக்கு உட்பட்டபகுதிகளில் மேலும் 11 முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்க ரயில்வே வாரிம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் - திருவனந்தபுரம் , திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத ரயில்கள் வரும் 8-ம் தேதி முதலும், கோயம்புத்தூர் - பழனி, மதுரை - பழனி, திருநெல்வேலி - செங்கோட்டை , திருச்செந்தூர் - திருநெல்வேலி, காரைக்குடி - விருதுநகர், விழுப்புரம் - மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத ரயில்கள் வரும் 10-ம் தேதி முதலும் இயக்கப்படும்.

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி, பாலக்காடு - பொள்ளாச்சி முன்பதிவு இல்லாத ரயிலகள் வரும் 13-ம் முதலும் சேலம் - கரூர் முன்பதிவு இல்லாத ரயில்கள் வரும் 15-ம் தேதி முதலும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x