Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
கோவை: கோவை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கடைசி நாள் வரும் 31-ம் தேதி ஆகும். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT