Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

திருச்சோபுரம் அங்கன்வாடி மையத்தில் - பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகள் மயக்கம் :

விருத்தாசலம்

கடலூரை அடுத்த அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகள் மயக்கமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சிக்குட்பட்ட பூதங்கட்டிகம்பளிமேடு கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட குழந்தைகளில் ஒவ்வொருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அங்கன்வாடி பணியாளரும், உதவியாளரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து குழந்தைகள் இரு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து மையத்தில் உணவை பரிசோதித்த போது, அதில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்த ஆட்சியர் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். உணவை பரிசோதித்து அறிக்கை அளிக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எவரேனும் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x