Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

கோவை குற்றாலம் இன்று மீண்டும் திறப்பு :

கரோனா இரண்டாம் அலை காரணமாக, போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குட்பட்ட கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலம் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கடந்த 6-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகம் காரணமாக 12-ம் தேதி முதல் மூடப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்துள்ளதால் இன்று (செப். 20) மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறும்போது, “கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர், 10.30 மணி முதல் 11.00 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 7826070883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x