ஞாயிறு, டிசம்பர் 15 2024
Last Updated : 27 Aug, 2021 03:12 AM
Published : 27 Aug 2021 03:12 AM Last Updated : 27 Aug 2021 03:12 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி பகுதியில் உள்ள கண்மாய்களில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ முனீஸ்குமார் விசாரணை நடத்தினார். இதில் 2 கண்மாய்களிலும் 7 டன் சீமைக்கருவேல மரங்கள், புங்கன் மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ புகாரில் பூலாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாவீரன், முருகன், ராஜா மற்றும் லாரி ஓட்டுநர் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து மாவீரன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மரக்கட்டைகளுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT