Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான - தேர்தல் அட்டவணை வெளியீடு :

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வரும் 16-ம் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 17-ம் தேதி பகல் 1 மணிக்குள் வேட்பு மனு சரிபார்க்கப்படும். 18-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். 19-ம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படு்ம்.

தேர்தல் அவசியமானால் வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x