Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் வாழ்த்து :

சென்னை

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரைஇறுதிக்கு முன்னறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி,இந்திய மகளிர் ஹாக்கி அணிஅரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை கைப்பற்ற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x