Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

தனியா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை :

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மதுரை வருவாய் மாவட்டத்தில் தனி யார் மெட்ரிக், நர்சரி மற்றும் பிரைமரி, பிற கல்வி வாரிய (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ) பள்ளிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவீத கல்விக் கட்டணமும், மீதம் 35 சதவீத கட்டணத்தை கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலத்திலும் வசூல் செய்ய வேண்டும்.

எனவே, 2021-22-ம் ஆண்டு கல்வி யாண்டுக்கு மொத்தம் 75 சதவீத கல்விக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது உரிய ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர் feesgrievancecellmdu@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x