Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

உசிலம்பட்டியில் கிரிக்கெட் போட்டி : அதிமுக எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் :

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியில் சிவாலயா கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பி.அய்யப்பன் தொடங்கி வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் பூமாராஜா, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜ், வடுகபட்டி ஒன்றிய கவுன்சிலர் வதனா தனிக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வேல்டு லெவன், ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட 26 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ.15,001, இரண்டாம் பரிசாக ரூ.10,001, மூன்றாம் பரிசாக ரூ.7,001, நான்காம் பரிசாக ரூ.6,001 வழங்கப்படும் என்று கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x