Published : 13 Jul 2021 03:16 am

Updated : 13 Jul 2021 03:16 am

 

Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

வாணியம்பாடியில் கரோனா தடுப்பூசி முகாம் :

வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி.

வாணியம்பாடி: வாணியம்பாடி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் வாணி யம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. வணிகர் சங்கங்களின் மாநில துணைத் தலைவர் தர் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளர் மாதேஷ்வரன், நிர்வாகிகள் செல்வ மணி, அருண்குமார், முன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x