Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

வருவாய் தீர்வாய முகாம் தொடங்கியது :

மேட்டுப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்.

கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவல கங்களிலும், வருவாய் தீர்வாய முகாம் நேற்று தொடங்கியது.

தமிழக அரசின் வருவாய்த் துறையின் மூலம், ஆண்டுதோறும் வருவாய் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நடத்தப்பட்டு, வருவாய்த் துறையின் கோப்புகள், ஆற்றியபணிகள் குறித்து கிராம அளவில் தணிக்கை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இந்த முகாம் 2-வது நாளாக இன்றும் (ஜூன் 25) தொடர்கிறது. இதற்காக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, பொதுமக்கள் நேரில் வராமல், தங்களது கோரிக்கை மனுக்களை, கடந்த 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இணையம் வழியாகவோ, அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அனுப்பவும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் ஏற்கெனவே வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.

வருவாய்த் துறையினர் கூறும்போது, ‘‘மொத்தம் 490 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாவையும், 8 பயனாளிகளுக்கு மாதாந்திர முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x