Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல் :

அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2.2 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இன்னாள் மற்றும் முன்னாள் மருத்துவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் அடிப் படையில் அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் அரசு மருத்துவமனை முன்னாள் டீன் மருதுபாண்டியன், மருத்துவர்கள் பாலமுருகன், ரமேஷ், கார்த்திகேயன், கணேஷ் ஆகியோர் அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலுவிடம் ரூ.2.2 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நேற்று வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x