Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

ரூ. 85 லட்சத்தில் மண்டைக்காடு கோயில் சீரமைப்பு :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்

``தீவிபத்தால் சேதமடைந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கு, தமிழக அரசு ரூ. 85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது” என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேற்கூரை சீரமைப்பு பணிக்கு முன்னதாகதேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது. இதில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

அமைச்சர் கூறியதாவது: தற்காலிகமாக கூரைஅமைக்கப்படுகிறது. கோயிலில் தேவபிரசன்னம் பார்க்கவேண்டும் என்றும், ஆகம விதிகளின்படி இக்கோயிலை கட்டித்தர வேண்டும் என்றும், பக்தர்கள் வைத்த கோரிக்கைகள் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதன்படி தேவபிரசன்னம் தொடங்கியுள்ளது. நாளை (இன்று) வரை நடைபெறவுள்ளது. இதன்படி, என்னென்ன பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியுமோ? அப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில் மூலஸ்தான மேற்கூரையை புதுப்பிக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது.

தீவிபத்துக்கான காரணங்கள் குறித்துவிசாரித்த 4 பேர் குழுவினர், தற்காலிகஅறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அஜாக்கிரதை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு ஏற்பட்டதீவிபத்து அல்ல. எதிர்பாராத விதமாக நடந்தது.ஆனாலும், இறுதிக்கட்ட அறிக்கை வந்ததும்உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின்போது அமைச்சர் மனோதங்கராஜ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்பி பத்ரிநாராயணன், சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x