Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தயான்சந்த் விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மீது சம்பந்தப்பட்ட விருதினை குறிப்பிட்ட வேண்டும்.
விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஜூன் 16-ம் தேதிக்குள் பரிந்துரை செய்து ‘உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை’ முகவரிக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT