Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

ஊரடங்கு கட்டுப்பாடு அதிகரிப்பால் - மதுரையில் விதிகளை மீறியோர் மீது கடும் நடவடிக்கை : போலீஸார் எச்சரிக்கை

கரோனா 2-ம் அலை பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து பிற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டிடப்பணி போன்ற அத்தி யாவசிய வேலைகளுக்குச் செல் பவர்கள் தவிர, தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம், ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், ஹோட்டல், மளிகைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட கடைகள் மதியம் வரை செயல்படும் என்பதாலும், ஏற்கெனவே நிலுவையிலுள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற தளர்வை பயன்படுத்தி மதுரையில் 30 சதவீதத்துக்கும் மேலான மக்கள் வெளியில் வரு கின்றனர். போலீஸார் அவர் களை தடுக்க முயன்றால் அத்தியா வசியத் தேவைக்குச் செல்வதாகக் கூறி வாக்குவாதம் செய்கின்றனர்.

இந்நிலையில், முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சியினர் ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் அதிகம் வெளியில் வருவதை தடுக்க முக்கியச் சந்திப்புகளில் போலீஸார் சோதனையை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை யில் போலீஸார் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினர். முகக் கவசம் அணியாதது, சமூக விலகலை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குறித்த நேரத்தில் கடைகளை மூடாதது உள்ளிட்ட விதிகளை மீறியதாக நேற்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

கடந்த முறை ஊரடங்கின்போது, கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஹோட்டல்களும் மூடப்பட்டன. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. தேவை யின்றி வெளியில் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன. ஒரு கட்டத்தில் போஸீஸ் நடவடிக்கைக்கு அஞ்சி மக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். இந்தமுறை கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பஜார்களில் விதிகளை கடைப்பிடிக்காமல் சுற்றுகின்றனர். நேற்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

துக்க நிகழ்வு, மருத்துவச் சிகிச்சை போன்ற அத்தி யாவசிய தேவைக்கு மட்டும் அனுமதிக் கப்பட்டனர். ஊரடங்கு விதியை மீறியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி வெளியில் வருவோர் எண்ணிக்கை குறை யலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x