Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

வானிலை மையம் பலத்த மழை எச்சரிக்கை - மதுரையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் :

வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக் கடல் பகுதியில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் இருந்து நேற்று மாலை தலா 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களை சேர்ந்த வீரர்கள் மீட்புக் கருவிகளுடன் கேரளாவுக்குச் சென்றனர்.

தமிழகத்துக்கான 4 குழுக்களில் 2 குழுக்கள் கோவைக்கு சென்றன. மீதம் உள்ள 2 குழுக்கள் மதுரை வந்து யாதவர் கல்லூரியில் தங்கியுள்ளனர். இவர்கள் இன்று ஆட்சியர் அன்பழகனை சந்திக்கின்றனர். மழை, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மீட்புக் குழுவினரை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனப் பேரிடர் மீட்புக் குழு அதிகாரி மோகன் ரங்கன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x