Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

ஆனைமலையில் கொப்பரை ஏலம் :

பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.845 குறைந்தது.

ஆனைமலை ஒழுங்குமுறைவிற்பனைக்கூட கண்காணிப்பா ளர் மணிவாசகம் கூறியதாவது:

ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 737 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில், அவற்றை தரம் பிரித்து ஏலம் விட்டதில், முதல்தர கொப்பரை 381 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,200-க்கும்,அதிகபட்சம் ரூ.11,210-க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 356 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9,100-க்கும், குறைந்தபட்சம் ரூ.7,200-க்கும்விற்பனையானது. 9 வியாபாரிகள், 124 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். குவிண்டாலுக்கு இந்த வாரம் ரூ.845 விலை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தைவிட 41 மூட்டைகள் வரத்து குறைந்து காணப்பட்டது. மொத்தம் 353 குவிண்டால் ரூ.36 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x