Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை’ :

திருப்பூர்/ கோவை: திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.மலர்க்கொடி, கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தொழிலாளர் ஆணையர் வள்ளலார் அறிவுரைப்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசாமி மற்றும் இணை ஆணையர் லீலாவதி ஆகியோர் வழிகாட்டுதல்படியும், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி தலைமையிலும் உறுப்பினர்களைக் கொண்டு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மலர்க்கொடி - 98897-23235, திருப்பூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் செந்தில்குமார் - 98942-57543, தாராபுரம் தொழிலாளர் துணை ஆய்வாளர் பேச்சுமுத்து - 99442-58037 ஆகியோரை தொடர்புகொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம். இதேபோல கோவை மாவட்டத்தில் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.வெங்கடேசன் 99411-21001, துணை கட்டுப்பாட்டு அலுவலர் க.செல்லப்பா 99424-37022, உதவி கட்டுப்பாட்டு அலுவலர் அப்துல்கபூர் 9843029910 ஆகியோர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x