Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தின விழா மதுரை பொன்மேனி அலுவலகத்தில் நடைபெற்றது.
நடிகரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான சி.எம்.வினோத் தலைமை வகித்தார். குறும்பட இயக்குநரும், நடிகருமான டாக்டர் ஜெ. விக்டர் முன்னிலை வகித்தார். விழாவில் மீசை தங்கராஜ், அப்பா பாலாஜி, மனோகரன், காசிநாதன், கோபாலகிருஷ்ணன், செந்தில்ராஜன், ராமுக்காளை, பேரையம்பட்டி வி.பெருமாள், பிரபாகரன், அழகப்பன், ரமேஷ், வெங்கடேசன், வீரா, மேரி, நிர்மலா, முத்துதேவி, ரஞ்சிதா, பிரியதர்ஷினி, தயாநிதி, அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மே தினத்தை முன்னிட்டு நலிந்த கரகாட்டப் பெண்மணி முத்து தேவிக்கு தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.விழாவை ஒளிப்பதிவாளர் செந்தில்நாதன், சங்க அலுவலக மேலாளர் பாலா ஏற்பாடு செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT