Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

காந்தி மார்க்கெட்டில் நாளை முதல் சில்லறை வியாபாரத்துக்கு தடை :

திருச்சி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை விற்பனைக்கு ஏப்.10-ம் தேதி(நாளை) முதல் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, திருச்சி காந்தி மார்க்கெட்டில் நாளை முதல் பொதுமக்களுக்கு சில்லறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் கூறியது:

அரசின் அறிவிப்பின்படி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபார கடைகளுக்கு தடை இல்லை. பொதுமக்களுக்கு ஏப்.10(நாளை) முதல் சில்லறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இதில், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறு மொத்த வியாபாரமும் நடத்துவது என்றும் பிற்பகல் 2 மணிக்கு மேல் தூய்மைப் பணி மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள பூ மற்றும் மளிகைக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x