Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு - கோவை அரசு மருத்துவமனையில் உயர் தர சிறப்பு பயிற்சி :

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் உயர் தர சிறப்புப் பயிற்சியை பெற்றோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை (ஏப்.2) முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையின் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுசேவை மையம் (டிஇஐசி) சார்பில்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆட்டிசம்உள்ள 106 குழந்தைகள் பதிவுசெய்து இம்மையத்தில் பயிற்சி பெற்றுவருகின்றனர். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தகவல் தொடர்பில் சிக்கல் இருக்கும். பெற்றோரையும், குடும்பத்தையும் இது பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் மேற்கொள்ள ஒரு நாளைக்கு ரூ.500 செலவாகும். பலமாதங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, ஏழ்மைநிலையில் உள்ள பெற்றோரால் சிகிச்சையின் செலவை சமாளிக்கமுடியாது. கோவை அரசு மருத்துவ மனையில் முதல்முறையாக மேலை நாடுகளில் கிடைக்கும் சிறந்த பயிற்சியாக Applied Behavioral Analysis (ABA) therapyஎனும் பயிற்சியை ‘தேர்ட் ஐஆட்டிசம் சென்டர்’ அறக்கட்டளை யுடன் இணைந்து குழந்தைகள் மருத்துவ பிரிவு மற்றும் டிஇஐசிமருத்துவ குழுவினர் தொடங்கியுள்ளனர். இந்த தெரபி மூலம் குழந்தைகளின் தகவல் தொடர்பு மற்றும் கற்றல் திறன் மேம்படும். இப்பயிற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள தனித்திறனை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் தன்னை உணர்ந்து, தன்னிச்சையாக தங்களை பார்த்துக்கொள்ளும் நிலையை குழந்தைகள் அடைய முடியும்.

மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் இதுவரை இருதய கோளாறு உள்ள 81 குழந்தைகள், அன்னப்பிளவு உள்ள 80 குழந்தைகள், காது கேளாமல் இருக்கும் 223 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் குழந்தைகளுக் கென தனியாக பல் மருத்துவர், பல் மருத்துவ ஆய்வாளர் உள்ளனர். பிறந்தது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இம்மையத்தில் பயன்பெற்று வருகின்றனர். இங்குகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை, செவித்திறன் ஆய்வகம் மற்றும் பேச்சுப்பயிற்சி, உளவியல், இயன்முறை மருத்துவம் போன்றவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்இம்மையத்தை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில் ‘தேர்ட் ஐ ஆட்டிசம் சென்டர்’ இயக்குநர் சரண்யா ரங்கராஜ், குழந்தைகள் நல துறை தலைவர் டாக்டர் பூமா, குழந்தைகள் நல மருத்துவர் முகமது அன்சார்அலி, டிஇஐசி மருத்துவ அதிகாரிரவிசங்கர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x