Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

ஈரோடு மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவில் ஆண்கள் முதலிடம் :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 19 லட்சத்து 63 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 15 லட்சத்து 9 ஆயிரத்து 692 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது, வாக்குப்பதிவு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 8 தொகுதிகளிலும் மொத்தம் 9 லட்சத்து 56 ஆயிரத்து273 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 51 ஆயிரத்து766 பேர் தேர்தலில் வாக்களித் துள்ளனர். பெண் வாக்காளர்களைப் பொறுத்தவரை மொத்த முள்ள 10 லட்சத்து 6 ஆயிரத்து 649 பேரில், 7 லட்சத்து 57 ஆயிரத்து 888 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளர்களில் 78.61 சதவீதமும், பெண் வாக்காளர்களில் 75.29 சதவீதமும், மற்றவர்கள் 34. 55 சதவீத வாக்காளர்களும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்களே முந்தியுள்ளனர். இதன் மூலம், அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக ஆண் வாக்காளர்கள் மாறி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x