Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

ஆர்வமுடன் வாக்களித்த முதல்முறை வாக்காளர்கள் :

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் முதல்முறையாக வாக்கு செலுத்தும் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக வாக்களித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்வாக்களித்த சுரேஷ் பிரபாகர்(21)கூறும்போது, ‘‘நான் பி.இ படித்து வருகிறேன். முதல்முறையாக வாக்களிப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மாற்றம் வரவேண் டும் என்பதன் அடிப்படையில் எனதுமுதல் வாக்கை பதிவு செய்தேன்’’ என்றார்.

ஒண்டிப்புதூர் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த கனிஷ்கா(18) கூறும்போது, ‘‘ நான் பெங்களூரில் பி.காம் சிஏ படித்து வருகிறேன். வாக்களிப்பதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு கோவைக்கு வந்துள்ளேன். முதல்முறையாக வாக்களித்ததை நினைக்கும்போது பூரிப்பாக உள்ளது’’ என்றார்.

கண்ணம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் வாக்களித்த சினேகா (20) கூறும்போது, ‘‘நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதல் முறையாக வாக்களித்ததை நினைக்கும் போது பெருமையாக உணர்கி றேன்’’என்றார்.

ஒண்டிப்புதூர் மாநகராட்சிப் பள்ளியில் வாக்களித்த சஷாந்த் (28) கூறும்போது, ‘‘நான் இன்ஜினி யராக உள்ளேன். முதல்முறையாக வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளேன். வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

ஒண்டிப்புதூர் மாநகராட்சிப் பள்ளியில் வாக்களித்த ஸ்மிருதி (20) கூறும்போது, ‘‘வாக்களிப்பது அனைவரின் உரிமை. எனக்குஅந்த வாய்ப்பு கிடைத்தது, வாக்களித்துள்ளேன். வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்’’ என்றார்.

உடுமலை

உடுமலை தொகுதிக்குட்பட்ட சத்திரம் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வைஷ்ணவி(19), தாராபுரம் சாலை அரசு பள்ளியில் வாக்களித்தார். அவர் கூறும்போது, “முதல் தடவையாக வாக்களிக்க வந்ததால் ஒரு வித பயமும், பதற்றமும் இருந்தது. எனினும் ஜனநாயக கடமையை நிறைவு செய்ததில் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

மடத்துக்குளம் தொகுதிக்குட் பட்ட கணியூர் பேரூராட்சியை சேர்ந்த பொறியியல் மாணவி புவனேஸ்வரி கூறும்போது, “முதல் முறையாக வாக்களிக்க வந்தது பெருமையாக உள்ளது. தமிழகத்தில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு முன் வர வேண்டும்” என்றார்.

உதகை

நீலகிரி மாவட்டத்திலும் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தொரை ஜாடா கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகளான சகோதரிகள் சினேகா கலா, மோனிகா கலா ஆகியோர் கேத்தி சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்த னர். அவர்கள் கூறும்போது, “வாக்களிப்பது பெருமை. நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x