Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

ரெப்கோ வங்கிக்கு இருவேறு விருதுகள் மேலாண் இயக்குநருக்கும் விருது

தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சி மாநாடு மெய்நிகர் முறையில் கடந்த ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மத்திய விவசாயம் மற்றும் உழவர் நலன் இணை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தலைமை தாங்கினார்.

விழாவில் ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இஸபெல்லாவுக்கு ‘ஆண்டின் சிறந்த பெண் தலைவர்’ விருதும், வங்கிக்கு ‘சிறந்த இலக்க முறை வங்கி’, ‘சிறந்த மோசடி கட்டுப்பாட்டு முயற்சி’ ஆகிய விருதுகளும் கிடைத்துள்ளன.

பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக கடந்த 1969-ம் ஆண்டில் ரெப்கோ வங்கி உருவாக்கப்பட்டது. நாளடைவில் வங்கி வளர்ச்சிபெற்று ரூ.16 ஆயிரம் கோடி மொத்த வர்த்தகத்தை எட்டியுள்ளது.

வங்கி சிறந்த அமைப்பு முறைகள், செயல்முறைகள், கொள்கைகளை கொண்டுள்ளது. முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மூல தரவு மையம், பேரிடர் மீட்பு மையம் ஆகியவற்றை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரெப்கோ வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x