Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

குடியரசு தினத்தன்று சிறப்பு விடுமுறை சட்டத்தை மீறிய 2 ஆயிரம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தன்று சிறப்பு விடுமுறை சட்டத்தை மீறியதற்காக 2 ஆயிரம் கடைகள், உணவு,தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலத் துறையால் பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைச் சட்டம் 1958-ன்படி தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 தினங்கள், 5 பண்டிகை விடுமுறை தினங்கள் என 9 நாட்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையரால் அறிவுறுத்தப்பட்டது.

இதன்பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அமலாக்க அலுவலர்களால் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் விதிகளை மீறியதாக தமிழகத்தில் உள்ள 957 கடைகள், நிறுவனங்கள் மீதும், 925 உணவு நிறுவனங்கள், 94 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 24 தோட்ட நிறுவனங்கள் என 2ஆயிரம் நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x