Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஆம்பூர் அருகே ராஜீவ்காந்தி சிலை சேதம் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராஜீவ் காந்தி சிலை சேதப் படுத்தப்பட்டதற்கு தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருப் பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவச் சிலை சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்னர் அன் றைய தமிழக காங்கிரஸ் தலைவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி யால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் தினால் தற்காலிகமாக அகற்றப் பட்ட அச்சிலை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

சாமிநாதனுக்கும், அவரது சகோதரர் மறைந்த ராஜா என் பவரின் புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு, முன்விரோதம் காரணமாக அவர்களின் இடத்திலிருந்த ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தி யிருக்கிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது.

தனிப்பட்டவர்களின் விரோதம் காரணமாக ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட சிலையை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண் டும். இல்லையெனில், காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x