Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி சந்தேகங்களுக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரி

கரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது வாட்ஸ்அப் பதிவில் தெரி வித்திருப்பதாவது:

கரோனா தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியதற்காக பிரதமர், மத்திய சுகாதாரத்துறைக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

தடுப்பூசி போடப்படும்போது கரோனா பாதுகாப்பு நடவடிக் கைகளை முறையாக கவனிக்கி றோம். இதுதொடர்பாக சந்தேகங் கள் இருந்தால் 104 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திவழியாக நமது சுகாதாரத்துறையில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அழைப்பு வரும். அவ்வாறு அழைப்பு வராதவர்கள் காத்திருக்க வேண்டும். சுகா தாரத்துறை மூலமாக வரும் செய் திகளை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.

கரோனா கட்டுப்பாட்டு அறை யில் தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தன்னார்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு நாள் முன்னதாக நினைவுபடுத்துவதற்கு தன்னார்வலர்களை நியமிப்போம் என நிவாரணம் மற்றும் மறு வாழ்வுத் துறையின் சிறப்பு ஆணையரான பங்கஜ்குமார் ஜா தகவல் பகிர்ந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x