Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப் பட்டது.

திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாய பாசன வசதிக்காக விநாடிக்கு 130 கன அடி தண்ணீரை நேற்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்து மலர் தூவினார்.

இதுகுறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், " வெலிங்டன் ஏரியி லிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று விவசா யிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர், ஜனவரி 11 முதல் 110 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்தார். நேற்று முதல் விநாடிக்கு 130 கனஅடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 23 ஏரிகள் 63 கிராமங்களில் கீழ்மட்ட கால்வாய் மூலம் 9,209 ஏக்கர் நிலம், மேல்மட்ட கால்வாய் மூலம் 14,850 ஏக்கர் நிலம் ஆக மொத்தம் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 29.72 அடி ஆகும். தற்சமயம் 26.80 அடி தண்ணீர் உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் தற்போது 1,860 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

110 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தண்ணீ ரினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விருத் தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார்,கண்காணிப்புப் பொறி யாளர் ரவி மனோகரன், செயற் பொறியாளர் மணிமோகன், வேளாண்மை இணை இயக்குநர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x