Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இளைஞரை கொலை செய்த 3 பேர் கைது

பேரணம்பட்டு

பேரணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அருகேயுள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). மேளம் அடிக்கும் தொழி லாளி. அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் ஹேமராஜ் என் பவருக்கு நேற்று முன்தினம் பிறந்த தினம். ஹேமராஜ் பெங் களூருவில் இருந்ததால் அவரது பிறந்தநாளை ஊரில் கொண்டாட அஜித் உள்ளிட்ட நண்பர்கள் திட்டமிட்டனர். அதன்படி, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்தபடி வீடியோ கால் மூலம் ஹேம்ராஜை தொடர்பு கொண்டு பிறந்த நாள் கொண் டாட்டத்துக்கு தயாராகினர்.

அப்போது, எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக பிரமுகரின் மகன் ராபின் (27), மற்றும் ரீகன் ராஜ் (38), சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற சின்னா (25) ஆகியோர் ஏரிக்கரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அந்த நேரத்தில் ஹேம்ராஜின் பிறந்த நாளை கொண் டாடிக் கொண்டிருந்த அஜித் தரப்பினரிடம் இங்கே ஏன் பிறந்த நாளை கொண்டாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அஜித் தரப்பினருக்கும் மற்றும் ராபின், ரீகன்ராஜ் ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே திருவிழா தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. திடீரென பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கேள்வி எழுப்பி யதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில், ஆத்திரமடைந்த ராபின், ரீகன் ராஜ், சின்னா ஆகியோர் அஜித்தை பேனா கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதைத் தடுக்க வந்த அஜித்தின் சகோதரர் திலீப் (21) மற்றும் சித்தப்பா வேலு ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

இந்த தகவலறிந்த சாமரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அஜித் உயிரிழந்தார்.

ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் திலீப் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேலுவை மட்டும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில், மேல்பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று விசா ரணை செய்தனர். மேலும், சாமரிஷிகுப்பம் மற்றும் எம்.வி.குப்பம் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரீகன்ராஜ், ராபின், சதீஷ்குமார் என்ற சின்னா ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக அஜித் தரப்பில் இருந்த மற்ற நபர்கள் யார்? என்றும் காவல் துறையினர் தனியாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x