Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

மூணாறு நிலச்சரிவில் உறவினர்களை இழந்த தம்பதிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

கோவை: கேரள மாநிலம் மூணாறு ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், தங்கள் உறவினர்களை இழந்த கயல்விழி-ரமேஷ் தம்பதியினர் வேலை தேடி திருப்பூருக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த கயல்விழியை பிரவத்துக்காக கோவை அரசு மருத்துவமனையில் ரமேஷ் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு தீபாவளியன்று பெண் குழந்தை பிறந்த நிலையில், ஒருவார தொடர் கண்காணிப்புக்கு பிறகு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருவரும் உறவினர்களை இழந்துவிட்டதாலும், மூணாறில் ஏற்கெனவே இருந்த இடத்தில் கேரள அரசு சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும் எங்கு செல்வதென தெரியாமல் தவித்துவந்தனர். தங்களுக்கு தங்க இடம் அளிக்க அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தனது சொந்த பணத்தில் ரூ.5 ஆயிரத்தை நேற்று அளித்தார். ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் தங்க இடம், உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x