Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

தகுதியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார் - பிரதமர் மோடி மிகச் சிறந்த ஜனநாயக தலைவர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்

புதுடெல்லி

‘‘பிரதமர் மோடி மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர். ஒருவரின் அந்தஸ்து, செல்வாக்கைப் பார்க் காமல், தகுதியின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை செய்தி களை வழங்கும் மத்திய அரசின் ‘சன்சாத்’ தொலைக் காட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மற்றவர்கள் என்ன சொல்கிறார் கள், அவர்களுடைய கருத்து என்ன என்பதை மிக கவனமாகக் கேட்க கூடியவர் பிரதமர் மோடி. கூட்டங்களில் அளவாகப் பேசு வார். ஆனால், மற்றவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்பார். எல்லோருடைய கருத்துகளையும் கேட்ட பிறகு தகுதியின் அடிப்படையில் அவர் முடிவெடுப்பார். ஒருவர் மிகப் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார், மிகுந்த செல்வாக்கு மிக்கவர் என்றெல்லாம் பிரதமர் மோடி பார்ப்பதில்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவர் முடிவுகள் எடுக்கிறார். அமைச்சர் களுடன் எந்த ஆலோசனைகள் நடத்தினாலும் அவற்றின் ரகசியத்தன்மை காக்கப்படுவது உண்மைதான். அவர் மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர்.

ஆனால், பிரதமர் மோடியின் பெயரை கெடுக்க சிலர் திட்டமிட்டு எதிர்க்கின்றனர். அவருக்கு இருக்கும் மதிப்பை சீர்குலைக்க நினைக்கின்றனர். பிரதமர் மோடி செயல்படும் விதம், அவருடைய மனோபலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அவர் தலைமையின் கீழ் நான் பணியாற்றுவது மிகப்பெரிய அதிர்ஷ்டம். முதலில் குஜராத்திலும் தற்போது மத்திய அரசிலும் அவருக்கு கீழ் வேலை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசியல் பயணம்

பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் குஜராத்தில் பாஜக அவ்வளவாக காலூன்றாத நேரத்தில் கட்சி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். 1995-க்கு பிறகு அங்கு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

அதன்பிறகு தொடர்ந்து பாஜக ஆட்சி பொறுப்பில் உள்ளது. இரண்டாவதாக அவர் குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு கடந்த 2001-ம் ஆண்டு மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. ஆனால் மோடி தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் மிக விரைவாக மீண்டும் கட்டமைக்கப்பட்டது. நாட்டுக்கே முன் மாதிரி மாநிலமாக குஜராத் மாறியது. மூன்றாவதாக நாடு பல துறைகளிலும் தடுமாறிக் கொண்டிருந்த போது மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது, நாட்டை ஆட்சி செய்ய தான் வரவில்லை, மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதை பிரதமர் மோடி உணர்ந்தார். அதற் காக பிரச்சினைகளை கண்டு துணிந்து சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவற்றை எல்லாம் ஜீரணிக்க முடியாத சிலர் மோடியை எதிர்த்து வருகின்றனர். அதேபோல்தான் பிரதமர் மோடி மீது அவர்கள் தனிப்பட்ட முறையில் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். குடும்ப அரசியல் என்ற சிந்தனை நாட்டில் சில அரசியல் குடும்பங்களுக்கு கொள்கையாகவே மாறியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x