Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM

கடந்த 6 மாதங்களில் குறைந்த அளவாக - நாடு முழுவதும் 18,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் பதிவான குறைந்த அளவு ஆகும்.

மத்திய சுகாதார அமைச்சகத் தின் நேற்று காலை நிலவரப்படி யான கரோனா புள்ளிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 209 நாட்களில் இல்லாத குறைவான தினசரி பாதிப்பு ஆகும். அதிகபட்சமாக கேரளாவில் 8 ஆயிரத்து 850 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை கடந்த 201 நாட்களில் இல்லாத அளவாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 902(0.75%) ஆக குறைந்துள்ளது.ஒரே நாளில் 29 ஆயிரத்து 639 பேர்குணமடைந்தனர்.

கரோனாவுக்கு மேலும் 263 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கடந்த11 நாட்களாக தொடர்ந்து 30 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆகி உள்ளது. இதில் 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 886 பேர் (97.93%) குணமடைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x