Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

காஷ்மீர் தீவிரவாதிகளின் குடும்பத்தினருடன் - ராணுவ உயரதிகாரிகள் சந்திப்பு : சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு வழிகாட்ட வேண்டுகோள்

காஷ்மீர் தீவிரவாதிகளின் குடும்பத்தினருடன் ராணுவ, போலீஸ் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது தங்கள் பிள்ளைகள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு வழிகாட்ட வேண்டுகோள் விடுத்தனர்.

தெற்கு காஷ்மீரின் ஷோபியான் நகரில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் 80-ம் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்றன. காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய்குமார், ராணுவத்தின் 15-வது படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே, விக்டர் ஃபோர்ஸ் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஷீம் பாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே பேசும்போது, “உங்களை சந்தித்து பேச வேண்டும் என்ற விருப்பத்தை விக்டர் படை கமாண்டிங் அதிகாரியிடம் நான் தெரிவித்தேன். இதன் மூலம் வன்முறைப் பாதையிலிருந்து உங்கள் பிள்ளைகளை வெளி யேற்ற வேண்டும் என உங்களை கேட்டுக் கொள்ள விரும்பினேன். அவர்களை அமைதியாக வெளி யேற்றுங்கள். நீங்கள் அதை எப்படி செய்வீர் என்று எனக்குத் தெரியாது. அது உங்களைச் சார்ந்தது. இதில் இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டால் அவர் களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நாங்கள் தடுப்போம். உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவோம் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.

தெற்கு காஷ்மீர் தீவிர வாதிகளின் குடும்ப உறுப்பி னர்களுடன் போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் நேரடி யாக பேசுவது இதுவே முதல் முறையாகும். ஷோபியான், புல் வாமா, குல்காம், அனந்த்நாக் போன்ற தெற்கு காஷ்மீர் மாவட்டங்களில் இருந்து வந்த குடும்பங்கள் இதில் பங்கேற்றன.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும் போது, “தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு மத்தியில் நம் பிக்கையை ஏற்படுத்துவதும் பாதுகாப்பு படையினரின் விருப் பத்தை தெரிவிப்பதும் இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். சமூக மற்றும் குடும்ப ஆதரவு, ஆண்களை வன்முறை மற்றும் மரணத்தின் பாதையிலிருந்து விலக்கிவிடும். தீவிரவாத செயல்களை கையாளக்கூடிய, ஆயுதங்கள் இல்லாத தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். வன்முறையின் சுழற்சியை உடைப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட இளைஞர்களுடன் மேஜர் ஜெனரல் பாலி கலந்துரை யாடினார். இதுவும் மற்றொரு வகை முதல் முயற்சியாக கூறப் பட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x