Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுங்கள் : மேகாலயா பாஜக அமைச்சர் பேச்சு :

ஷில்லாங்: மேகாலயா மாநில கேபினட் அமைச்சராகக் கடந்த வாரம் பதவியேற்ற சன்போர் ஷுல்லாய், ஆடு, கோழி, மீன்களுக்குப் பதில் மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுங்கள், ஜனநாயக நாட்டில் என்ன விருப்பமோ அதை சாப்பிட அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது’’ என்று நேற்று கூறினார்.

இதுகுறித்து சன்போர் மேலும் கூறும்போது, ‘‘மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுங்கள் என்று நான் பொதுமக்களை ஊக்கப்படுத்தும்போது, மாடுகளை வெட்ட பாஜக தடை போடும் என்ற தவறான கருத்து மறைந்துவிடும். அசாமில் மாநிலத்தில் பசு வதை சட்டம் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்வது பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸிடம் பேசுவேன்’’ என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x