Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

திருமலையில் பாதுகாப்பு ஆய்வு :

திருமலை: திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், ஆக்டோபஸ் படையினர், ஆயுதப்படையினர், உள்ளூர் போலீஸார், தேவஸ்தான கண்காணிப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், மகளிர் போலீஸ் என பாதுகாப்பு பலமாக இருக்கிறது. எனினும் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால், திருமலையிலும் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இதற்கான கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதல்களை எதிர்க்கொள்ள தயாரிக்கப்பட்ட கருவிகளின் கருத்தரங்கில் தேவஸ்தானத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். இதில் வைக்கப்பட்டிருந்த ஒரு கருவியின் விலை ரூ. 25 கோடியாகும். இதனை அதிகமாக வாங்கும்பட்சத்தில் விலையை குறைப்பதாக ‘பெல்’ நிறுவனம் கூறியதை தொடர்ந்து 100 கருவிகளை முதல்கட்டமாக வாங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இக்கருவிகளை பொருத்தும் இடங்களை ஆய்வு செய்யும் பணிகளும் தற்போது திருமலையில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று திருமலையில் உள்ள வனப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி தலைமையில் 2-ம் கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்றன. இதில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரகசிய ஆலோசனையும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x