Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

சீனக் கடலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 14-ல் நாடு திரும்புகின்றனர்

புதுடெல்லி: சீனக் கடலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 18 பேர் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நாடு திரும்புகின்றனர் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இந்தியாவின் எம்.வி.அனஸ்தேசியா என்ற சரக்கு கப்பல் சீனக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இக்கப்பல் துறைமுகத்துக்கு வர சீன அரசு அனுமதிக்கவில்லை. மேலும் மாலுமிகளை மாற்றிக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை. இவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சீனக் கடலில் சிக்கியுள்ள எம்.வி.அனஸ்தேசியா சரக்குக் கப்பலில் உள்ள நமது மாலுமிகள் 18 பேர் நாடு திரும்புகின்றனர். இக்குழுவினர் இன்று (நேற்று) ஜப்பானை விட்டு வெளியேறி பிப்ரவரி 14-ம் தேதி இந்தியா வருகின்றனர்” என்று கூறியுள்ளார். இந்திய மாலுமிகளை திரும்ப அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டதற்காக சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் மெடிட்டரேனியன் ஷிப் கம்பெனிக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு முன், 23 மாலுமிகளுடன் சீனக் கடலில் சிக்கியிருந்த எம்.வி. ஜாக் ஆனந்த் சரக்குக் கப்பல் கடந்த ஜனவரி 14-ம் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x