Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

97% அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை ஏடிஆர் ஆய்வில் தகவல்

நாட்டில் 97.5 சதவீதம் அங்கீககரிக்கப்படாத கட்சிகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஏடிஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் தற்போது 2,360 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன. இதில்97.5 சதவீத கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை. கடந்த 10 ஆண்டுகளில் கட்சிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் நாட்டில் 1,112 கட்சிகள் இருந்த நிலையில், 2019-ல் இது 2,301 ஆக அதிகரித்துவிட்டது. 2013, 2014-ம் ஆண்டுகளில் இது 18 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 2018, 2019-ம் ஆண்டுகளில் 9.8 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டுகளில்தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தபோதிலும் அவை அங்கீகரிக்கப்படாதவையாக உள்ளன. பொதுத் தேர்தலிலோ அல்லது மாநில பேரவைத் தேர்தலிலோ போட்டியிட்டு போதுமான வாக்குகளைப் பெறாத கட்சிகளும், புதிதாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் என தேர்தல் ஆணையத்தால் அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தரும் பலன்கள் செல்லுபடி ஆவதில்லை.

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் தேர்தலுக்காக நன்கொடை வசூல் செய்கின்றன. ஆனால் 2018-19-ம்ஆண்டில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 3.39 சதவீத கட்சிகள்மட்டுமே தாங்கள் வாங்கிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x