Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

இதுவரை 54 லட்சம் பேருக்கு இந்தியாவில் கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 54 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 4,57,404 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி காலை நிலவரத்தின்படி நாடு முழுவதும் இதுவரை 54,16,849 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மிக அதிகபட்சமாக 6,73,542 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 4,34,93 பேருக்கும் ராஜஸ்தானில் 4,14,422 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குஜராத்தில் 3,94,416 பேர், கர்நாடகாவில் 3,60,592 பேர், பிஹாரில் 3,54,360 பேர், மேற்கு வங்கத்தில் 3,44,227 பேர், மத்திய பிரதேசத்தில் 3,40,625 பேர், கேரளாவில் 2,86,132 பேர், ஆந்திராவில் 2,72,190 பேர், ஒடிசாவில் 2,35,680 பேர், தெலங்கானாவில் 1,93,667 பேர், தமிழகத்தில் 1,57,324 பேருக்குகரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான கரோனாபரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,40,794 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வின் சவுபேமக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 2-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸுக்கு எதிரான போரில் 174 மருத்துவர்கள், 116 செவிலியர்கள், 199 சுகாதார ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15,17,506 படுக்கைகளும், அவசரசிகிச்சை மையத்தில் 79,385 படுக்கைகளும் 40,311 வென்டிலேட்டர்களும் உள்ளன. 1,214 அரசு, 1,152 தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x