Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

வரும் 2021-2022 நிதி ஆண்டில் ஜிடிபி 11% வளர்ச்சியை எட்டும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளா தார ஆய்வறிக்கையில் வரும் நிதி ஆண்டில் இந்தியா 11 சதவீத வளர்ச்சியை எட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் பெரு மளவு முடங்கியது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக் கப்பட்டுள்ளன. இருப்பினும் முழுமையான சகஜ நிலை திரும்பவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்குமுன்னோட்டமாக நாட்டின் பொருளாதார நிலை, எதிர்கொள்ளப்படும் சவால்கள், வளர்ச்சி குறித்த கணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதி ஆண்டில் (2020-21) இந்தியாவின் வளர்ச்சி (ஜிடிபி) மைனஸ் 7.7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு இந்தியாவில் 1,53,847 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா வரும் நிதி ஆண்டில் புத்தெழுச்சியுடன் 11 சதவீத வளர்ச்சியை எட்டும்.1991-ம் ஆண்டில் மேற்கொள் ளப்பட்ட தாராளமய பொருளா தாரக் கொள்கையின் விளைவாக ஸ்திரமான வளர்ச்சியை வரும் நிதி ஆண்டில் இந்தியா எட்டும்.

இந்தியாவின் வளர்ச்சியானது ஆங்கில எழுத்து 'வி' வடிவில் அமையும். கரோனாவுக்கு முந் தைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.

இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் தடுப்பூசிநடவடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நுகர்வு அதிகரிப்பதோடு முதலீடுகளும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

2020-21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழு உருவாக்கியுள்ளது. இக்குழு 2021-22-ம் நிதி ஆண்டில் ஜிடிபி 11 சதவீத வளர்ச்சியை எட்டும் என கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x