Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கடல் விமான சேவை இன்று தொடங்குகிறார்

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் குடும்பத்தினரை பிரதமர் மோடி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் (92) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள்பயணமாக நேற்று அகமதாபாத் வந்தார். விமான நிலையத்தில் இருந்து காந்திநகரில் உள்ள மறைந்த கேசுபாய் படேல் இல்லத்துக்கு சென்ற மோடி, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கேசுபாய் படேலுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றியது குறித்த நினைவுகளை மோடி பகிர்ந்து கொண்டதாக குடும்பத் தினர் தெரிவித்தனர். மேலும் படேலின் இறுதிக் காலம் பற்றி மோடி கேட்டறிந்ததாகவும் அவர் கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, திரைத்துறை யில் இருந்து அரசியல்வாதிகளாக மாறிய நரேஷ்பாய் கனோதியா (77) மற்றும் மகேஷ்பாய் கனோதியா (88) ஆகியோரின் இல்லத்துக்கு சென்ற மோடி, அவர்களின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார். கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் சமீபத்தில் உயிரிழந்தனர்.

பின்னர் நர்மதா மாவட்டம் கெவதியா நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஆரோக்யவாகன சேவையை தொடங்கி வைத்தார். அதில் சிறிது தூரம்பயணித்தார். அங்கு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பூங்காவையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அதே நகரில் சர்தார் படேல் விலங்கியல் பூங்காவையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான இன்று, நாட்டின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த சேவை கெவதியா காலனி மற்றும் அகமதாபாத் (சபர்மதி) இடையே இயக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x