Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

தகுதியான ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் - 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் ரூ.6 ஆயிரம் கோடி தள்ளுபடி : பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள், ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் முதல்வர் தெரிவித்ததா வது:

திமுக தேர்தல் அறிக்கையில், ‘கூட் டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவு னுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளு படி செய்யப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பேரவையில் கூட்டுறவு மானியக் கோரிக்கையின்மீது கடந்த ஆக.25-ம் தேதி நடந்த விவா தத்தில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், கடந்த ஆட்சியில் வழங்கப் பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டினார்.

அதுபோன்ற தவறுகள் நகைக் கடன்களிலும் எந்தெந்த வகையில் நடந்துள் ளன என்பதை விளக்கி, தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே கடன் தள்ளுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அனைத்து நகைக் கடன்கள் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் அடிப்படையில், ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள், சில தகுதிகளின்கீழ் உண்மை யான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

அவ்வாறு தள்ளுபடி செய்யும்போது சரியான, தகுதியான ஏழை மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று அரசு கருதுகிறது. எனவே, 5 பவுனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சிலரது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அரசு கருதுகிறது.

எடுத்துக்காட்டாக, 2021-ம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட தில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத் தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் இருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள், தவறாக அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையைப் பெற்று, நகைக் கடன் பெற்றவர்கள் மற் றும் இதுபோன்றவற்றில் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய இய லாது. இதற்கான விவரமான வழிமுறை களை கூட்டுறவுத்துறை ஓரிரு நாளில் வெளியிடும். முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக் கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மமக, கொமதேக, தவாக கட்சிகளின் சார்பில் வரவேற்று பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x