Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு - அரசு பேருந்துகளில் இலவசமாக மாணவர்கள் பயணம் செய்யலாம் : அடையாள அட்டை, சீருடை போதுமானது

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர் களுக்கு சுழற்சி முறையில் பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படும். பள்ளி, கல் லூரி மாணவர்கள் நாளை முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு ஐடிஐ, அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள், தொழிற்பயிற்சி நிலையங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த கல்வி நிறுவனங்கள் நாளை (1-ம் தேதி) திறக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் தடையின்றி கல்வி நிறுவனங்களுக்கு சென்றுவர புதிய இலவச பயண அட்டை அச்சடித்து தரு வதில் ஏற்படும் கால தாமதத்தை கருத் தில்கொண்டு, அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கு மாறு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

2021-22 கல்வியாண்டில், மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங் கப்படும் வரை அரசுப் பேருந்துகளில் அவர்கள் இலவசமாக பயணிக்க அனு மதிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்தோ அல் லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய அடையாள அட் டையை நடத்துநர்களிடம் காண்பித்தோ தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

அதேபோன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ, பாலிடெக்னிக்) பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டி கட்டணமின்றி பயணிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கூடுதலாக 500 பேருந்துகள்

தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாண வர்கள் ஏறும்போதும், இறங்கும் போதும் கவனமாக செயல்பட வேண்டு மென ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சீருடையுடன் வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடத்துநர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சர்வீஸ்களும் இயக்கப்படும். தேவையின் அடிப்படையில் சுமார் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க உள்ளோம்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x