Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு - தமிழகத்தில் முழு ஊரடங்கு தீவிரமாகிறது : முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் இதற்கான முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு, நிவாரணப் பணி கள் குறித்து விவாதிப்பதற்காக சட்டப் பேரவையில் இடம் பெற்ற கட்சிகளின் கூட்டம் சென்னை தலைமைச் செய லகத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி (திமுக), டி.ஜெயக் குமார், டாக்டர் பரமசிவம் (அதிமுக), எஸ்.விஜயதரணி, ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நகேந்திரன், எம்.என்.ராஜா (பாஜக), சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), கு.சின்னப்பா, எம்.பூமிநாதன் (மதிமுக), நாகை மாலி, மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த ஆலோசனை களின் அடிப்படையில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத் துழைப்பு அளிப்பது, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை அனைத்துக் கட்சிகளும் நிறுத்துவது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வழிகாட்டியாக நடப்பது மற்றும் மக்களுக்குத் தேவையான நிவா ரணப் பணிகளில் அனைவரும் முழு மனதுடன் ஈடுபடுவது, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைப்பது, மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை கருத்தில்கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளின் நிலைமை மோசமடைந் ததும் கடைசி நேரத்தில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றன. இத னால்தான் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. நோய் தீவிரமடைந்த பிறகு நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற செயல். இதை தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் படுக் கைகள் எண்ணிக்கையை அதிகரிக் கவும், முதலமைச்சரின் காப்பீட்டு திட் டத்தின்கீழ் கரோனா சிகிச்சை அளிக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று (மே 13) இரவு 80 டன் ஆக்சிஜன் சென்னை வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தல்ல என்று மருத்துவ நிபு ணர்கள் கூறி வருகின்றனர். எனவே, தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுடன் காணொலி காட்சி மூலம் பேசினேன். உற்பத்தி அதிகரித் ததும் ரெம்டெசிவிர் மருந்தை மேலும் கூடுதலாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறி னார்.

அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, டிஜிபி ஜே.கே. திரிபாதி, பேரிடர் மேலாண் மைத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணையர் க.பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலர் ப.செந்தில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x