Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு - கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரம் குறைவு : ஒரே நாளில் 3.29 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் முதன்முதலாக இரண்டு மாதங்களுக்கு பிறகு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரம் குறைந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3.29 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 61 நாட்களில் முதன்முறையாக நேற்று கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,016 குறைந்திருக்கிறது. அதாவது, பெருந்தொற் றில் இருந்து குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப் பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேருக்கு மட் டுமே வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களாலேயே வைரஸ் பாதிப்பு குறைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகபட்சமாக கர்நாடகாவில் 39,305 பேருக்கும், கேரளாவில் 37,290 பேருக்கும், மகாராஷ்டிராவில் 37,236 பேருக்கும், தமிழகத் தில் 28,978 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 21,331 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 17,120 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்புக்கு 3,876 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஆந்திரா, ஹரியாணா, டெல்லி ஆகிய 10 மாநிலங்கள் தான், தினசரி வைரஸ் பாதிப்பில் 69.88 சதவீதத்தை பிடித்திருக்கின் றன. அதேபோல, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 82.68% பேர் இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 82 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். இதனுடன் சேர்த்து, இதுவரை பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.90 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, குணமடைந்தவர்களின் விகிதம் 82.75% உள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள் ளிட்ட மாநிலங்களில் குணமடைவோரின் விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்திருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

இன்று (நேற்று) இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கண்கூடாக குறைந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறை வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதே சமயத்தில், கர்நாடகா, கேரளா, தமி ழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வைரஸ் பரவலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய புள்ளிவிவரத்தின் படி, நாட் டில் உள்ள 13 மாநிலங்களில் கரோனா பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக் கும் அதிகமாக உள்ளது. 6 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் கரோனா நோயாளி கள் இருக்கின்றனர். 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா நோயாளிகளே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x