Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் - பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் கட்டாயம் : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி வாழ்வியல் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர் வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என என்டிஏ நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. மேலும் இந்த கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி வாழ்வியல் அறி வியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் வழக்கமான நேரடியாக எழுதும் முறையில் (ஆன்லைனில் இல்லை) நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடை பெற்று வந்தாலும் தமிழகம் உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தி யில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் இருந்த நேரத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மருத் துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவ தற்கே எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி வாழ்வியல் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x