Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

சீர்காழியில் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை என்கவுன்ட்டரில் கொள்ளையன் மரணம்சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் போலீஸ் நடவடிக்கை

சீர்காழியில் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை கொன்று 16 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பியது. போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளையர் களில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத் துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் (50). இவர், தருமக்குளத்தில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும், நகை அடகுக் கடையும் வைத்துஉள்ளார்.

தன்ராஜின் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வந்து, கதவைத் தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தன்ராஜ், கதவை திறந்து வெளியே வந்தார். அவரை தள்ளிவிட்டு 3 பேரும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தன்ராஜின் மனைவி ஆஷா (45), மகன் அகில் (24) ஆகியோர் கூச்சலிட்டனர். இத னால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஆஷா, அகில் ஆகிய இருவரின் கழுத்தையும் கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.

பின்னர் தன்ராஜ், அவரது மருமகள் நெக்கல் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. கத்தியைக் காட்டி மிரட்டி, நகை இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர். பயந்துபோன தன்ராஜ், படுக்கை அறையில் நகை இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த அறையில் கட்டிலின் அடியில் வைத்திருந்த 16 கிலோ தங்க நகைகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டனர். சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்கையும் எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தன்ராஜின் காரில் ஏறி 3 பேரும் தப்பிச் சென்றனர்.

அதன்பின்னர், தன்ராஜும் அவரது மருமகளும் கூச்சலிட் டதை கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் படுகாய மடைந்து கிடந்த இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவ லறிந்து வந்த போலீஸார், ஆஷா, அகில் ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு, விசாரணை நடத்தினார்.

இதனிடையே, கொள்ளையர் கள் தப்பிச் சென்ற கார், ஒலையாம்புத்தூர் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருப் பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் நாதா, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தடயம் ஏதாவது கிடைக்கிறதா என ஆய்வு செய்தார்.

வயலில் பதுங்கல்

இந்நிலையில், சீர்காழியை அடுத்த எருக்கூர் மேலத்தெரு பகுதியில் உள்ள வயலில் சந்தே கப்படும்படியாக 3 வெளி நபர்கள் அமர்ந்துள்ளதாக, அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற சீர்காழி போலீஸார், அப் பகுதியில் மறைந்திருந்த கொள்ளையர்களை வெளி யேறும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், கொள்ளையர்கள் தங் களிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தனர். ஆனாலும், அவர்கள் 3 பேரையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணை யில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிபால் சிங், ரமேஷ், மணிஸ் ஆகியோர் என்பதும், இவர்கள்தான் தன்ராஜ் வீட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என் பதும் தெரியவந்தது. கொள்ளை யடித்த நகைகளை வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்ப தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகைகளை மீட் பதற்காக மணிபால் சிங்கை மட்டும் போலீஸார் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

தப்பியோட முயற்சி

அப்போது, மணிபால் சிங், திடீரென போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனால், காவல் கண்காணிப்பாளர் நாதா அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், மணிபால் சிங் குண்டு காயம் அடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோத னைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.

பின்னர், வயல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகள், சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, ரமேஷ், மணிஸ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் நிகழ்ந்து, 4 மணி நேரத்துக்குள் கொள்ளை யர்களை போலீஸார் பிடித்து, நகைகளை மீட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் மற்றும் போலீஸார், முத்துப்பிள்ளை மண் டபம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அந்த வழி யாக காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கருணா ராம்(38) என்பவரை விசா ரித்தபோது, அவர் முதலில் இந்தி யிலும், பின்னர் தமிழிலும் பேசி னார்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கும்ப கோணத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கருணாராம், ஜான் செல்வராஜ் நகரில் செருப்புக்கடை நடத்தியதும், சீர்காழியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை, கொள்ளை சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட மணிபால்சிங் உட்பட 3 பேரையும் தனது காரில் சீர் காழிக்கு கருணாராம் அழைத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x