Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

ரூ.4,456 கோடி முதலீட்டில் 5 நிறுவனங்களுக்கு அடிக்கல் ரூ.19,995 கோடியில் 18 புதிய திட்டங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழக தொழில்துறை சார்பில் ரூ.19,995 கோடியில் 18 நிறுவனங்களுடன் புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.4,456 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ள 5 நிறுவனங்களின் திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் 53,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:

தமிழக தொழில்துறை சார்பில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ரூ.19,995 கோடி முதலீட்டில் 26,509 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் 18 நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும், ரூ.4,456 கோடி முதலீட்டில் 27,324 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 5 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ரூ.47 கோடி முதலீட்டில் 385 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய நிறுவனத்தின் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்கள் விவரம்:

l ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி சார்பில் ஒசூரில் ரூ.2,354 கோடி முதலீட்டில் 2,182 பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி திட்டம்.

l டாரன்ட் கேஸ் சென்னை நிறுவனம் சார்பில் சென்னை, திருவள்ளூரில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி அளிக்கும் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம்.

l ரூ.4,185 கோடி முதலீட்டில் அமெரிக்கா வின் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் சோலார் மாட்யூல் தயாரிக்கும் திட்டம். இதன்மூலம் 1,076 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

l சொசைட்டி ஆப் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் சார்பில், திருப்பூர் மாவட்டம் தாத்தனூரில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின் வாகனங் களுக்கான தொழில்பூங்கா.

l காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் ரூ.1,001 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வோல்டாஸ் நிறு வனத்தின் குளிர்சாதன பெட்டி, வணிக குளிர்பதன பெட்டி தயாரிப்பு திட்டம்.

l அமெரிக்காவின் மைலான் லேபாரட்ரீஸ் நிறுவனம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட் டம் குருபரப்பள்ளியில் ரூ.350 கோடி முதலீட்டில், 250 பேருக்கு வேலை அளிக்கும் உயிர்காக்கும் மருந்து உற்பத்தி திட்டம்.

l சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குரித் இந்தியா நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.320 கோடியில் 300 பேருக்கு வேலை அளிக்கும் காற்றாலை தகடுகள் தயாரிக்கும் திட்டம்.

l லாட்வியா நிறுவனத்தின் யாகிளாஸ் சார்பில், ரூ.300 கோடியில் 1,000 பேருக்கு வேலை அளிக்கும் எஜூடெக் திட்டம்.

l திருப்பூர் மாவட்டம் பெருமணல்லூரில் கேபிஆர் சுகர் நிறுவனத்தின் ரூ.250 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் ஜவுளி உற்பத்தி திட்டம்.

l மேக்னஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.200 கோடியில் 150 பேருக்கு வேலை அளிக்கும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம்.

அமெரிக்க நிறுவனம்

l அமெரிக்காவின் ஸ்டேனடைன் நிறுவனம் சார்பில், ரூ.180 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலை அளிக்கும் ப்யூயல் இன்ஜக்சன் பம்ப் உற்பத்தி திட்டம்.

l மகிந்திரா சிஐஇ சார்பில் ஒசூரில் ரூ.100 கோடியில் 500 பேருக்கு வேலை அளிக்கும் மோட்டார் உதிரிபாக உற்பத்தி திட்டம்.

l திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் ரூ.60 கோடியில் 500 பேருக்கு வேலை அளிக்கும் அஞ்சன் ட்ரக்ஸ் நிறுவன மருந்து தயாரிப்பு திட்டம்.

l ஒசூரில் ரூ.50 கோடியில் 220 பேருக்கு வேலை அளிக்கும் மால்வியா பார்மா நிறுவன ஆலை விரிவாக்கத் திட்டம்.

l ஜெர்மனியைச் சேர்ந்த ஐக்சாப் விண்ட் ஏசியா நிறுவனம் சார்பில், ரூ.410 கோடி முதலீட்டில் 525 பேருக்கு வேலை அளிக்கும் காற்றாலைகளுக்கான கியர் பெட்டிகள் தயாரிக்கும் திட்டம்.

l டென்மார்க்கின் கியூபிக் மாடுலர் சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில், ரூ.120 கோடி மதிப்பில் 106 பேருக்கு வேலை அளிக்கும் ஷீட் மெட்டல் பாக்ஸ் உற்பத்தி திட்டம்.

l இத்தாலியை சேர்ந்த சாபப் நிறுவனம் சார்பில், ரூ.75 கோடியில் 200 பேருக்கு வேலை அளிக்கும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி திட்டம்.

l சேலத்தில் ரூ.2,500 கோடியில் 5 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் கிரவுன் குரூப் நிறுவனத்தின் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை உற்பத்தி திட்டம்.ஆகிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

l செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் ரூ.2,300 கோடியில் ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் அதானி நிறுவனத்தின் தகவல் தரவு மையம்.

l நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் ரூ.600 கோடியில் 100 பேருக்கு வேலை அளிக்கும் பிரான்ஸ் நாட்டின் டாரன்ட் கேஸ் நிறுவன நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம்.

l திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டி கையில் ரூ.536 கோடியில் 320 பேருக்கு வேலை அளிக்கும் ஜெர்மனியின் பேட்டர் நிறுவன வார்ப்பு உற்பத்தி திட்டம்.

l சென்னை பெரம்பூரில் ரூ.590 கோடியில் எஸ்பிஆர் குழுமத்தின் ஐடி பார்க் மற்றும் மார்க்கெட் பிளாசா திட்டம்.

l காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் ரூ.430 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை அளிக்கும் இண்டோஸ்பேஸ் வல்லம் நிறுவன தொழில்பூங்கா ஆகிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை போரூரில் உள்ள காமர்ஜோன் ஐடி பார்க்கில் ரூ.47 கோடி முதலீட்டில் 385 பேருக்கு வேலை அளிக்கும் என்பிசிஐ நிறுவன ஐடி, பேக் ஆபீஸ் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x