Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன விவசாயிகளின் நலன்களை அரசு பாதுகாக்கும் தொழில் வர்த்தக சபைகள் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி சிங்கு எல்லையில் திரளாக கூடியிருந்த விவசாயிகள். படம்: பிடிஐ

புதுடெல்லி

விவசாயிகளின் நலன்கள் பாதுகாக் கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபைகள் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) மாநாட்டில் காணொலி வாயிலாக அவர் நேற்று பேசியதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரிட் டோம். மிகக் குறுகிய காலத்தி லேயே இந்தியா மீண்டு எழுந்தது. வெளிநாட்டு முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதில் தனியார் நிறுவனங்கள் சாதனை படைத்து வருகின்றன. ‘சுயசார்பு இந்தியா' கனவு திட்டத்தை, நன வாக்க தனியார் துறை மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் வேளாண்மை, சிறு குறு தொழில்கள், உற்பத்தி சார்ந்த துறைகள், தொழில்நுட்பம், வரி, ரியல் எஸ்டேட் என அனைத்து துறைகளிலும் மத்திய அரசு சீர்திருத்தங்கள் செய்துள்ளது.

நமது நாட்டின் பல்வேறு தொழில் துறைகளுக்கு நடுவே இணைப்பை ஏற்படுத்த பாலங்கள் தேவை. இந்த இணைப்பு பாலத்துக்கு தடையாக இருக்கும் தடுப்புச் சுவர்கள் அகற் றப்பட்டு வருகின்றன. இதன்விளை வாக பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

எப்ஐசிசிஐ உள்ளிட்ட அமைப்பு கள் தொழில் துறைகளுக்கு இடையே இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். நமது நாட் டின் தயாரிப்புகள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்க வேண் டும். அதேநேரம் சர்வதேச சந்தை யிலும் இந்திய நிறுவனங்கள் கோலோச்ச வேண்டும்.

இந்தியா மிகப்பெரிய வணிக சந்தையாகும். நம்மிடம் அபரிமித மான மனிதவளம் இருக்கிறது. எதையும் சாதித்து காட்டும் செய லாக்கத் திறன் இருக்கிறது. இதை இந்திய தனியார் நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார், மொபைல் போன் ஆகியவற் றின் மூலம் அரசு நிர்வாகத் தில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. நேரடி மானிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. கரோனா தொற்று காலத்தில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட் டது. ஒரு மாதத்தில் சராசரி யாக 4 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறு கின்றன.

வாழ்க்கைத் தர முன்னேற்றம்

நாட்டின் முதுகெலும்பான விவ சாயிகளின் நலன்கள் பாதுகாக் கப்படும். அவர்களின் நலன்களில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. விவசாயிகள் வளம் அடைந்தால்தான் நாடு வளம் அடையும். அவர்கள் வலுவாக இருந்தால்தான், நாடு வலுவாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டே விவசாயிகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொள்கைகளை வரையறுக்கிறது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதை குறிக்கோளாக கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்துள்ளன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வேளாண் சந்தைகள் மட்டுமன்றி மின்னணு சந்தைகள் வாயிலாகவும் விற்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

வேளாண் துறையில் தனியார் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விற்பனை சந்தைகள், குளிர்சாதன கிடங்குகள், உரங்கள் ஆகியவற்றில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகிறது.

வேளாண்மையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் குளிர்பதன கிடங்கு வசதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் நிறைந்த பலன்களை பெறுவார்கள். வேளாண்மை, சேவைத் துறை, உற்பத்தித் துறை உள்ளிட்டவை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.

கிராமங்களில் முதலீடு

இணைய வசதியை பயன் படுத்தும் நகரவாசிகளின் எண்ணிக் கையைவிட, கிராம மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அண்மைக்காலமாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

பிரதமரின் வைஃபை இணைப் புத் திட்டத்துக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங் கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். நாடு முழுவதும் கிராமங் கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. 21-ம் நூற் றாண்டில், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியில் கிராமங்கள், சிறிய நகரங்களின் பங்களிப்பு அதிக மாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னணி தொழில் நிறுவனங்கள், கிராமங்களில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும். குறிப்பாக கிராமங்களின் வேளாண்மையில் அதிக முதலீடு செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஹரியாணாவில் 3 சுங்கச்சாவடி முற்றுகை

டெல்லியில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளில் இந்தப் போராட்டம் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் காரணமாக தலைநகரமே ஸ்தம்பித்துள்ளது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

நாளை உண்ணாவிரதம்

இந்தச் சூழலில், மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லியின் சிங்கு எல்லையில் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து சன்யுக்தா கிசான் விவசாய சங்கத்தின் தலைவர் கமல் ப்ரீத் சிங் கூறியதாவது:

மத்திய அரசு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து மட்டுமே பேசுகிறது. எங்களுக்கு அது தேவை கிடையாது. அதேபோல, விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கவும் அரசு முயற்சிக்கிறது. அதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், சனிக்கிழமை காலை (இன்று) ராஜஸ்தானில் இருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர். பின்னர், ஜெய்ப்பூர் – டெல்லி நெடுஞ்சாலையை இந்த டிராக்டர்களை கொண்டு விவசாயிகள் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவர். இவ்வாறு கமல் ப்ரீத் சிங் கூறினார்.

இந்நிலையில், ஹரியாணாவில் உள்ள 3 முக்கிய சுங்கச்சாவடிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். அங்குள்ள அம்பாலா – ஹிஸார் நெடுஞ்சாலை, பஸ்தாரா மற்றும் பியோந்த் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக, அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஹரியாணாவைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x